பிரான்ஸின் அதிபர் மக்ரோன் வளர்க்கும் அவரது செல்ல நாய் நீமோ தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.
பிரான்ஸின் இளம் அதிபர் மெக்ரோன் உலக அளவில் பிரபலமானவர். தற்போது அவரது செல்ல நாய் நீமோனும் அதன் சேட்டையால் சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.
மக்ரோன் அதிபர் மாளிகையில் தனது அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கபோது இரண்டு வயதான நிமோன் அங்கு வந்து ஒற்றைக் காலை தூக்கி சிறுநீர் கழித்துள்ளது.
இதனைக் கண்ட மக்ரோன் தர்மசங்கடத்தில் சிரித்துவிட அவருடன் இருந்த அவரது அமைச்சர்களும் சிரித்துவிட்டனர்.
இதுகுறித்து பிரான்சின் சூழியல் அமைச்சர் புருனே கூறும்போது, “நாங்கள் முக்கிய திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, நிமோன் சிறுநீர் கழித்த ஓசைக் கேட்டு என்ன சத்தம் என்று நான் முதலில் அதிர்ச்சியடைந்தேன்” என்றார்.
அதிபர் மாளிகையில் நிமோன் செய்த சுட்டிச் செயல் வீடியோவை பல்வேறு சர்வதேச பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. தற்போது இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.