முதல் தடவையாக பிரான்ஸ் சிக்கன்குனியா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Var மாவட்டத்தில் இரண்டாவது நபர் இந்த தாக்குதலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இந்த இரண்டாம் நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சுகாராத ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முதலாம் நபர் வசிக்கும் அதே பகுதியில் தான் இரண்டாம் நபரும் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும், வேகமாக பரவக்கூடிய நோய் என்பதால் அப்பகுதி உள்ள அனைத்து பகுதிகளிலும் நோய் பரவாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.
பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ள அளவில் பெரிய நுளம்புகளினாலேயே (moustique tigre) இந்த சிக்கன்குனியா நோய் பரவுவதாகவும், இந்த நுளம்புகளை அடியோடு அழிக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.