பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார்.
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா. கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில் மாற்றம் செய்தார். அப்போது ராஜேந்திர குடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதற்கு அவர் , அங்கு இருந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை சுட்டிக்காட்டி “எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் ” என ஜாலியாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]