பிரபல நடிகர் பாலு ஆனந்த் மரணம்
தமிழ் சினிமாவின் நடிகரும், இயக்குனருமான பாலு ஆனந்த் அவர்கள் கோயம்புத்தூரில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இவர் ஆனந்த தொல்லை, அண்ணாநகர் முதல் தெரு, நானே ராஜா நானே மந்திரி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், 100க்கும் மேற்பட்ட படங்களில் கொமடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
கடைசியாக பவர்ஸ்டார் சீனிவாசனை வைத்து ஆனந்த தொல்லை என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ளது.
இவருக்கு மனைவி உமா மகேஸ்வரி. ஸ்ரீவேலுமணி என்ற மகளும், ஸ்ரீசரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள். இவருடைய மறைவுக்கு திரையுலகில் உள்ள பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்கள்.
இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது.