நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒருவராக இருந்த வெங்கல்ராவ், சண்டை கலைஞராக இருந்து நகைச்சுவை நடிகராக மாறினார்.
‘பணக்காரன்’, ‘ராஜாதி ராஜா’, அமிதாப், தர்மேந்திரா உள்பட பல நடிகருக்கும் பல படங்களுக்கும் வெங்கல் ராவ் டூப் போட்டுள்ளார்.
சினிமாவில் சண்டை கலைஞராக தன் பயணத்தை தொடங்கிய வெங்கல் ராவ் சண்டைக் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் நடிகராக மாறினார்.
வெங்கல்ராவ் வடிவேலுவுடன் தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வடிவேலு சினிமாவில் ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் அவரது குழுவில் உள்ள பல நடிகர்களும் சினிமா வாய்ப்பில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். அதில் வெங்கல் ராவும் ஒருவர்.
இந்நிலையில் வடிவேலு மீண்டும் களம் இறங்கிய பிறகு பழைய நண்பர்களையும் தனது குழுவில் சேர்த்து வருகிறார். இப்போது சுராஜ் இயக்கி வரும் ‘நாய்சேகர் ரிட்டன்ஸ்’ படத்திலும் வெங்கலுக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில், சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ் திடீரென ஐதராபாத் வைத்தியசாலையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.