பிரபல கிரிக்கெட் வீரர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி அகமது ஷிஷிர் சென்ற ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்திலிருந்து அவர்கள் இருவருமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதான ஷாகிப் அல் ஹசனும் அவரது மனைவியும் படப்பிடிப்பிற்காக ஹெலிகாப்டரில் காக்ஸ் பஜார் பயணத்துள்ளனர்.
அவர்களை, பத்திரமாக இறக்கிவிட்டு டாக்கா திரும்பும் வழியில் Inani கடற்கரைக்கு அருகே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில், நான் நலமாக இருக்கின்றேன். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து நான் பதறிப்போனேன். விபத்து குறித்து எனக்கு ஏதும் தெரியாது, அப்போது நான் படப்பிடிப்பில் இருந்தேன் என கூறியுள்ளார்.