பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஒட்சிசன்: கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்
பிரபஞ்சத்தில் பூமியை சுற்றி மட்டுமே ஒட்சிசன் வாயு இருப்பதாக இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது.
பூமியைச் சூழ ஏறத்தாழ 805 கிலோ மீற்றர்கள் வரைக்கும் வளி மண்டலம் காணப்பட்ட போதிலும் சில கிலோ மீற்றர்கள் வரைக்கும்தான் ஒட்சிசன் வாயு காணப்படுகின்றது.
எனினும் வெவ்வேறு கிரகங்களிலும் இவ் வாயு காணப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந் நிலையிலே இப் பிரபஞ்சத்தில் பூமியிலிருந்து 13.1 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் ஒட்சிசன் இருப்பது விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இங்கு காணப்படும் ஒட்சிசன் ஆனது சொற்ப அளவாக இருக்கின்றது என குறித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்,
.