பிரதான ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கும் ஏற்புடையதாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு இசிப்பத்தான கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களை கருத்தில் கொண்டு ஊடகங்கள் செய்தியிடல் வேண்டும் என்ற கட்டுபாட்டு விதிமுறைகள் காணப்படுகின்றன. அதனை பேஸ்புக் பதிவேற்றம் இடுகைகளுக்கும் பொருந்தும் வகையில் அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்