சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை துவங்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி, இன்று சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரேசாமே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட 130 நாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த 1997-க்கு பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் மோடி இந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்கின்றனர். கடந்த மாநாட்டில் பிரதமராக இருந்த தேவே கவுடா பங்கேற்றார் .
மோடியை வரவேற்க போஸ்டர்
பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் டாவோஸ் நகரில் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது. டாவோஸ் நகரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பொருளாதார மாநாட்டில் மோடி நாளை உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.