‘அண்மைக்காலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற செய்திகள் கொடிய போரால் நொந்து போன மலையக உறவுகளின் மனதை மேலும் நோகடிப்பதாக அமைந்துள்ளன. பிரதேச வாதம், மதவாதம் பேசும் நேரம் இதுவல்ல.
ஏற்கனவே அரசியல் ரீதியாக முரண்பட்ட சமூகமாகக் காணப்படும் தமிழ் பேசும் மக்கள் இவ்வாறான குறுகிய வட்டத்துக்குள் பிரிந்து சென்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுநோக்கிய பயணத்தை கேள்விக்குறியாக்கிவிடும்’’ என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங் கம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் இனரீதியான வேறுபாடு குறைந்தளவி லேயே காணப்படுகின்றது. குறிப்பாக மொழி ரீதியாக இரண்டு தேசிய இனங்களே காணப்படுகின்றன.
எனினும் சுதந்திரத்துக்கு பின்னர் எண்ணிக்கையில் அதிகளவிலான சிங்கள தேசியவாதிகள் தமிழ் மக்களை இரண்டாம் தர குடி மக்களாகவே நடாத்தி வந்தனர். இதன் பிரதிபலிப்புதான் நாட்டில் ஏற்பட்ட உரிமைப்போராட்டமும் அதன்பால் ஏற்பட்ட இழப்பகளும்.
வடக்கு–கிழக்கைப் பொறுத்தரை ஈழவிடுதலைப்போராட்டத்தில் மலையகத் தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். தமிழ்மக்களுக்கான அற வழிப் போராட்டத்திலும் சரி, ஆயுதப்போராட்டத்தி லும் சரி ஒடுக்கப்பட்ட தமிழர்கள் என்பதன் அடிப்டையில் ஈழவிடுதலை இயக்கங்களுடன் இணைந்து மலையகத் தமிழர்களும் போராடியுள்ளனர்.
அவர்களைப் பற்றிய விரும்பத்தகாத, அருவருப்பான விமர்ச னங்களைச் சிலர் முன்வைப்ப தானது மனவேதனையைத் தருகிறது –என்றார்.
புலம்பெயர் தமிழர் ஒருவர் மலயகத் தமிழ் மக்களை இழிவுபடுத்திப் பேசிய காணொலி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. அந்தக் காணொளி கண்டனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. அது தொடர்பாகப் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.