வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கான (பிம்ஸ்டெக்) இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் 30 – 31 ஆம் திகதிகளில் கத்மண்டுவில் நடைபெறவுள்ளது.
4 ஆவது தடவைாயக நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டின் இறுதியில் பிம்ஸ்டெக்கிற்கான தலைமைத்துவம் நேபாளத்திடமிருந்து இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ளதாவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.