கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தில் மோசடிகள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பில் உடன் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி இந்த கோரிக்கையை மத்திய வங்கியிடம் விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். மத்திய வங்கி தமது கோரிக்கைக்கு இடம் தரவில்லை என்றால் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.