சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று முன்னிலையாக உள்ளார்.
பிணைமுறி தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட காலப்பகுதியில் நிதியமைச்சராக இருந்த நிலையில் அவரிடம் ஆணைக்குழு விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் நேற்று அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாக இருக்க வேண்டி இருந்த போதிலும் அரச பணிகள் நிமித்தம் முன்னிலையாக முடியாது என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்படுகிறது