ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையவெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கா வழங்கிய பதில் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினர். இதன் பின்னர் அவர் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கும் பதில்களை ஆராய்ந்த பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுக்கவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் சில ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ரவிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தத் தயாராகின்றனர். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிரணியினர் கொண்டு வந்துள்ள ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாக பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.