மத்திய வங்கி பிணை முறி கொள்ளையர்களை தூக்கிலிட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் மோசடி செய்யப்பட்ட பல கோடி ரூபா பணம் மீளவும் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டும்.
பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் வரையில் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். கள்வர்களுக்கு தண்டனை விதிப்பதாகத் தெரிவித்தே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்தது.
நல்லாட்சி அரசாங்கத்திலும் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால் அது பாரதூரமான ஓர் நிலைமையாகும். பிணை முறி மோசடி கொள்ளையர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது ஜனாதிபதி பிரதமரின் பொறுப்பாகும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.