ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இரு வழக்குகள் சட்ட மா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் படியே இந்த இரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் சரத் குமார குணரத்ன உட்பட குழுவினருக்கு எதிரான வழக்கே இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தில் மீனவர்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக திரைசேறியிலிருந்து பெறப்பட்ட ஒரு கோடி ரூபா நிதியில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலேயே இந்த இரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு ஆணைக்குழுக்களினால் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளாகவே இவை கருதப்படுகின்றன.