‘பிக் பொஸ்’ புகழ் நடிகர் நிரூப் கதையின் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்திற்கு, ‘ரெயின்போ’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் விவேக் கைபா பட்டாபிராம் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ரெயின்போ’. இதில் பிக் பொஸ் புகழ் நடிகர் நிரூப் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
இவருக்கு ஜோடியாக வானவில்லில் இடம் பெற்றிருக்கும் ஏழு வண்ணங்களை போல் ஏழு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் அறிமுக நடிகை சிம்ரன் ராஜ் ஒரு நாயகியாக நடிக்கிறார்.

மீதமூள்ள ஆறு நடிகைகளில் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்களுடன் மைம் கோபி, மனோபாலா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குநர் எஸ். பி. ஹோசிமின் எழுத, வினோத்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படத்திற்கு சுபாஷ் ஆனந்த் இசையமைக்கிறார்.
கொமர்ஷல் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை அன்னமார் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஹோசிமின் ப்ரொடக்ஷன்ஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் வசந்த் ராமசாமி மற்றும் இயக்குநர் எஸ். பி. ஹோசிமின் ஆகியோர் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

‘ரெயின்போ’ என்ற வண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட டைட்டில் காரணமாகவும், ஏழு நாயகிகள் நடிப்பதாலும் இந்த படத்தின் அறிவிப்பின் போதே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.