பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகை பாவனிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியலிலும் நடித்து வந்த நடிகை பாவனி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், ‘பிக்பொஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார்.
கடந்தவாரம்தான் ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சி முடிந்தது. இந்நிலையில், பாவனி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் .
அதில், ”லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை எனது நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். வைத்தியர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]