வடகிழக்கு மாநிலமான திரிபுரா சட்டசபைக்கு பிப்.18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மொத்தம் 60 தொகுதிகளில் பா.ஜ. 51 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதையடுத்து பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி இன்று திரிபுரா வருகிறார்.
திரிபுரா மாநில பா.ஜ. நிர்வாகி ஒரு கூறியதாவது மேற்கு திரிபுராவின் சோனாமுராவிலும், வடக்கு திரிபுராவின் கைலாஷ்ஹார் என்ற இடத்திலும் நடக்க உள்ள பிரசார கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். பின்னர் மீண்டும் பிப்.14 மற்றும் 15-ம் தேதிகளில் தலைநகர் அகர்தாலாவில் நடக்க உள்ள பிரசார கூட்டத்தி்ல் பங்கேற்கிறார்.இவ்வாறு அவர் கூறினார். மோடி வருகையையொட்டி திரிபுராவின் சர்வதேச எல்லை பகுதி சீல் வைக்கப்பட்டு பி.எஸ்.எப். வீரர்கள் கண்காணித்து வருகி்ன்றனர்.