பால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் பால் மா விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனத் தொழில் மற்றும் வணிக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் நிலவும் விலையின் அடிப்படையில், இறக்குமதியாளர்களை சிக்களுக்க உள்ளாகாது தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 3 ஆயிரத்து 250 முதல் 3 ஆயிரத்து 350 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது. அதன்விலை, எதிர்வரும் காலத்தில் 3 ஆயிரத்து 400 முதல் 3 ஆயிரத்து 500 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.