பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க தவிர்ந்த ஏனைய அனைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற இலங்கை அணியினர் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போன நிலையில், இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும், உபாதை காரணமாக போட்டியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் செய்த பாலியல் துஷ்பிரயோக முறைப்பாட்டையடுத்து அவர் அந்த நாட்டு பொலிஸாரினால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனுஷ்க குணதிலக இன்று அவுஸ்திரேலிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.