ஆர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் கிளப்புடனான புதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டாததால், லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.
இந்த தகவலை லா லிகா கிளப் வியாழக்கிழமை அறிவித்தது.
இது தொடர்பாக பார்சிலோனா டுவிட்டர் பக்கத்தில்,
பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை. பார்சிலோனா கிளப்புடனான ஒப்பந்தம் காலாவதியானதால் லியோனல் மெஸ்ஸி தனி வீரரானார் என அறிவித்தது.
ஆறு முறை பலோன் டி’ஓர் வென்ற மெஸ்ஸி, 34, கடந்த மாதம் கோபா அமெரிக்காவில் விளையாடி ஆர்ஜென்டினாவுக்காக ஒரு பாரிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தார்.
லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறுவார் என்ற செய்தி உலக கால்பந்து அரங்கை உலுக்கியுள்ளது. மேலும் ஆர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் அடுத்து எங்கு செல்வார் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
______________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news