பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்க சதி?
பாரீஸில் உள்ள Notre Dame என்ற பகுதியில் சந்தேகத்திற்குரிய கார் ஒன்று நின்றபோது அதனை பொலிசார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது, காரில் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தினர்.
மேலும், இவ்விவகாரத்தில் தொடர்புடைய 4 பெண்களை பொலிசார் கடந்த வியாழக்கிழமை அன்று கைது செய்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில் நால்வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பெண்கள் நால்வரும் பிரான்ஸில் ஐ.எஸ் தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நால்வரில் Ornella Gilligman(29) என்ற பெண் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் ஒரு குழந்தைக்கு தாயார் ஆவார்.
பொலிசார் இப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் ஈபிள் கோபுரத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கும் நோக்கத்தில் அவர்கள் திட்டம் தீட்டியது அம்பலமானது.
பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை தகர்க்க சதி நிகழ்ந்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் தற்போது பாதுகாப்பு பலமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.