பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசு அறிவிப்பு: எவ்வளவு தெரியுமா?
பிரேசிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது.
இதனால் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மாநில அரசுகள் பரிசுகளை அறிவித்திருந்தன. தற்போது மத்திய அரசு பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மொத்தமாக 90 லட்சம் ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.
இதில் இந்தியாவிற்கு தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பன் மற்றும் தேவேந்திர ஜாஜாரியா விற்கு 30 லட்சம் ரூபாயும், வெள்ளி வென்ற தீபா மாலிக்குக்கு 20 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்ற வருண்சிங் பாட்டிக்கு 10 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக தரப்படும் என மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவார்சந்த் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் எனவும், இவர்களுக்கான பரிசுத்தொகை ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதில் தரப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் ரியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இவர்களை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.