சட்டம் இயற்றும் சபையான பாராளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் இயற்ற முடியாது என்ற சரத்தை புதிய அரசியலமைப்பில் உள்வாங்குவதன் ஊடாக மாத்திரமே சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உத்தேச அரசியல் யாப்பில் சோல்பரி யாப்பின் 29 ஆம் சரத்தின் 2 ஆம் பிரிவு இணைக்கப்பட வேண்டுமெனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் உடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கிழக்கு முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.