நத்தார் தினம் இன்று திங்கட்கிழமை (25) கொண்டாடப்படும் நிலையில் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,
“போரினால் அவதிப்படும் நம் சகோதர, சகோதரிகளுடன் நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம். நாங்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல், உக்ரைன் பற்றி யோசித்து வருகிறோம். துன்பம், பசி, அடிமைத்தனம் போன்றவற்றால் அவதிப்படுபவர்களைப் பற்றியும் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
கிறிஸ்தவர்கள் ஜெபத்திலும், அன்பின் அரவணைப்பிலும், நிதானத்துடனும் கிறிஸ்துமஸ் எனும் இந்த புனித நாளைக் கொண்டாட வேண்டும். இந்த கிறிஸ்துமசை எளிமையாகவும், இல்லாதவர்களுடன் பகிர்ந்தும் கொண்டாட வேண்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.