பாதுகாப்பு எச்சரிக்கையால் பிரசல்ஸில் முக்கிய வணிக வளாகம் மூடல்
-
பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை தொடர்ந்து தலைநகர் பிரஸ்ஸால்ஸிலுள்ள ஒரு முக்கிய வணிக வளாகத்தை பெல்ஜியத்தின் ஆட்சியாளர்கள் மூடி இருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், போலியான தற்கொலை ஆடையை அணிந்திருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். வெடி பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிஷேல் பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினர்களுடன் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
கடந்த நம்பர் மாதம் பாரிஸிலும், மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸிலும் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் பெல்ஜியம் அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் இருந்து வருகிறது.
பெல்ஜியத்தின் நகர ரெயில் நிலையத்திலும், பிரதான விமான நிலையத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 32 பேர் கொல்லப்பட்டனர்.