பாடும் மீன்கள் இரவு 2016 மண்டபம் நிறைந்த விருந்தினர்கள், அங்கத்தவர்கள் கலந்துகொண்ட ஓர் சிறப்பான நிகழ்வாக இனிதே நடந்தேறியது. விழாவில் சுவாரசியமான பேச்சுக்கள், கலந்துரையாடல்கள், கௌரவிப்பு நிகழ்வுகள், கொமேடிகள், இசை அமுதம் என பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் பரத நாட்டிய நிகழ்வுகளும் மிகவும் அசத்தலாக நடைபெற்றது.
விழாவின் சிறப்பம்சம் என்னவெனில் கூடுதலான மக்கள் கலந்துகொண்ட ஓர் நிகழ்வாக விழா வெற்றிகரமாக நடைபெற்றதாகும். இந்த விழா ஓர் சிறந்த முக்கிய நோக்கத்துடன் நடைபெற்றது மிகவும் பாராட்டுதல்களுக்குரியதாகும். அதாவது எமது தமிழ் பிரதேசத்தின் எல்லைக்கிராமம் பெரியபுல்லுமலை என்ற கிராமத்தில் செல்வ செழிப்புடன் தமது சொந்த மண்ணில் வாழ்ந்த நமது மக்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மயிலம்பாவெளி அகதி முகாமில் வாழ்ந்துவருவது நாம் அறிவோம். இப்படியாக வாழும் நம் மக்களை மீள தங்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் நோக்குடன் ஓர் சிறந்த குஎற்ற திட்டத்தினை ஏற்படுத்தி அவர்களை மீள அமர்த்தும் நோக்குடன் இன்றைய நிதி சேகரிப்பு நிகழ்வானது நடைபெற்றது வரவேற்கத்தக்கதாகும். விழாவின் முக்கிய நிர்வாக உறுப்பினர்கள் மிகவும் சுறு சுறுப்பாக செயற்பட்டுக்கொண்டிருப்பதனை அவதானித்துக்கொண்ட நான் அவர்களிடம் நேராக சென்று ஒவ்வொருவராக எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டேன். குறிப்பாக இன்றைய நிகழ்வின் தலைவர் விசு கணபதிபிள்ளை அவர்கள் மிகவும் சிரித்த முகத்துடன் வருகின்ற விருந்தினர்களை வரவேற்று அவர்களுக்கு தங்களது அமைப்பின் சார்பாக வணக்கத்தினையும் நன்றிகளையும் தெரிவித்து அழைத்தவிதம் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. மேலாக ஏனைய செயற்குழு உறுப்பினர்களும் அதேபோல மிகவும் நிகழ்வில் உள்வாங்கப்பட்டு தங்களை முழுமையாக அர்பணித்து நிகழ்வின் வெற்றிக்கு வழிசமைத்தனர். விசேடமாக தளிர் மாதாந்த சஞ்சிகையின் பிரதம அதிபரும் தளிர் இணையத்தளத்தின் ஆசிரியரும், சமூக சேவையாளரும், மக்கள் ஒருங்கிணைப்பின் நாயகர் என பலராலும் அழைக்கப்படுபவருமான சிவா சிவமோகன் அவர்கள் மிகவும் முக்கியமான பிரதிநிதிகளை வரவழைத்து நிகழ்ச்சியின் வெற்றிக்கு தங்களால் ஆனா உதவியினை செய்திருந்தார்கள். விழாவின் முக்கிய செயற்குழு உறுப்பினர்களுக்கு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். சிவமோகனின் வேண்டுதல்களின்பிரகாரம் சமூக சேவா திலகம் இலங்கேஸ் அவர்கள் கனேடிய அரசாங்கத்தின் சான்றிதல்களை முக்கிய உறுப்பினர்களுக்கு வழங்கி கௌரவிப்பு செய்தார்கள். விழாவிற்கு பல தொழில் அதிபர்கள் வந்திருந்தார்கள். குறிப்பாக பல ஹோட்டல்களை உரிமையாகவும் நிர்வகித்துவருபவருமான ஷங்கர் நல்லதம்பி அவர்களும், வீடு விற்பனையில் மட்டுமன்றி அடைமான மூலதனத்தில் முன்னணியாகத் திகழ்ந்து வருபவரும், விளையாட்டு உல்லாசவிடுதிகளை வைத்திருப்பவருமான கிருபா கிருஷன் அவர்களுடன் முன்னாள் கார்ல்டன் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்ற தலைவரும் மக்களின் வளர்ச்சியின் பாதையில் பங்கெடுத்துவருபவருமான இளம் அரசியல்வாதி நிரஞ்சன் அவர்களும் வருகை தந்திருந்தனர். கிருபா கிருஷன் (Easy Home & Buy ) என்ற தொழில் அதிபர் தீடிரென மேடையில் ஏறி தங்களது நிதிப்பங்களிப்பினை வழங்கி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டது எல்லோராலும் பாராட்டப்பட்டது. நிகழ்வுகளில் பரத நாட்டியம் மிகவும் சிறப்பாக இருந்தது. இசையமுதத்தில் பிரபா, விஜிதா, நிர்யாணி மற்றும் பலர் கலந்துகொண்டு மிகவும் அசத்தலான பாடல்களை பாடி அனைவரையும் சந்தோசம் கலந்த இன்ப வெள்ளத்தில் முக வைத்தனர். நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக இராப்போசன விருந்து நாவிற்கு ஏற்படுத்திய சுவை இமயத்திற்கு எடுத்து சென்றது என்றால் அது மிகையாகாது. விழா ஏற்பாட்டாளர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துகளும்.
Langes, FCPA, FCGA