பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன், தூய்மையான இலங்கை என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்.
ஹோமாகம (Homagama) பகுதியில் நேற்று (21.10.2024) இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு செலவுத்திட்டம்
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும்.அதேநேரம், அடுத்த மார்ச் மாதத்திற்குள் புதிய வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்.

அத்துடன், கிராமத்தில் உள்ள மக்களை வறுமையில் இருந்து மீட்பதற்காக விசேட நடவடிக்கைகள் பாதீட்டின் ஊடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் பொதுச் சேவைகள் துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.