அநுராதபுரத்தில் பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர் ஒருவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கணிப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், பாடசாலைக்கு வருகைதந்து கையொப்பமிட்டு பிரத்தியேக வகுப்பு செல்வதாகவும் பெற்றோர்கள் குழுவொன்று வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோனிடம் முறைப்பாடு செய்திருந்தது.
அந்த முறைப்பாட்டின் பேரில், மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஏனைய பணியாளர்கள் குழுவுடன் இணைந்து பாடசாலையை ஆய்வு செய்த போது, இந்த ஆசிரியர், பாடசாலைக்குச் சென்று, ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, பாடசாலைக்கு வெளியே சென்று பிரத்தியேக வகுப்பில் மாணவர்களுக்கு கற்பித்ததைக் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, இந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.