ரொறொன்ரோ–பிரம்ரன் உயர்பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கொடிய துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் 42வது ஆண்டு நிறைவை நினைவு கூருமுகமாக நினைவு சின்னம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
42-வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி சூட்டு சம்பவம் ஆசிரியர் ஒருவரினதும் மாணவர் ஒருவரினதும் உயிரை பலிகொண்டது.
பிரம்ரன் சென்ரெனியல் இரண்டாந்தர பாடசாலையின் தற்போதய மற்றும் பழைய மாணவர்கள் சனிக்கிழமை காலை இந்த ஞாபகார்த்த சின்ன திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1975 மே மாதம் 16-வயதுடைய மைக்கேல் சிலோபோடியன் என்பவன் சகமாணவர் ஒருவரையும் ஆசிரியர் ஒருவரையும் சுட்டு கொன்றபின்னர் துப்பாக்கியை தன்மீது திருப்பிகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நினைவு சின்னம் இச்சம்பவத்தினால் துக்கத்தில் இருப்பவர்களின் துயர் துடைக்க உதவுமென சிலையை வடிவமைத்த மேரி எலென் வரோ தெரிவித்தார்.
இச்சம்பவம் நடந்த சமயத்தில் பாடசாலை மாணவராக இருந்த பாம் ஹான்ட் என்பவர் சூட்டுச்சம்பவத்தில் உடல் ரீதியாக தான் காயப்படவில்லை எனினும் இத்துயர சம்பவத்தால் உணர்வு பூர்வமாக பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறினார்.