அரச பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தலைமைத்துவப் பயிற்சி நெறித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த பயிற்சி நெறியின் போது ஹம்பாந்தோட்டை சுச்சீ தேசிய பாடசாலை அதிபரின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கல்வி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரையில் இப்பயிற்சித் திட்டத்தை நிறுத்தி வைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கையின் பிரகாரம் எதிர்வரும் காலத்தில் இப்பயிற்சித் திட்டத்தை முன்னெடுப்பதா? இல்லை? என்ற தீர்மானம் பெறப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர்களுக்கு கேர்ணல் பட்டத்தை வழங்கும் இப்பயிற்சி நெறியை விட கல்விக்கான நவீன போக்குக்குகள் தொடர்பில் பயிற்சிகளை வழங்குவதே காலத்தின் தேவையாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.