பாடகர் KJ யேசுதாஸ் குடும்பத்துடன் திடீர் மதமாற்றம்?
கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற பின்னணி பாடகர் KJ யேசுதாஸ் திடீரென மதம் மாறிவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அவர் பலமுறை இந்து கோயில்களில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுவே அவர் மதம் மாறியதாக செய்தி பரவ காரணமாகிவிட்டது.
மேலும் பிரபல அரசியல்வாதி சுப்ரமணிய ஸ்வாமி தான் ட்விட்டர் பக்கத்தில் “யேசுதாஸை ஹிந்து மதத்திற்கு வரவேற்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Let us all Virat Hindus welcome the twitter news, if true, that famous singer Yesudas has returned to the religion of hisHindu ancestors.
ஆனால் “இது வெறும் வதந்தி, நாங்கள் எந்த மதத்திற்கும் மாறவில்லை” என யேசுதாஸில் மனைவி பிரபா யேசுதாஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.