ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்று விட்ட சகோதரி, பரினிதி சோப்ரா. இவரும், பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டை சேர்ந்த, பிரபல பாடகர் நிக் ஜோனசை, காதலித்து வருவதும், இருவரும், விரைவில் திருமணம் செய்யப் போவதும் தெரிந்த விஷயம் தான்.
பிரியங்காவும், நிக் ஜோனசும், சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். இந்த காதல் ஜோடியுடன், பரினிதி சோப்ராவும், கோவா சென்றார். இந்த தகவல், ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, பரினிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,’நிக் ஜோனஸ், என் சகோதரி பிரியங்காவின் உறவினர்களை எல்லாம், அவர் தெரிந்து வைத்துள்ளார். பிரியங்காவுக்கு, நான் உட்பட, உறவு முறையில், பல சகோதரிகள் உள்ளோம். அவர்களில், ஜோனசுக்கு மிகவும் பிடித்த மச்சினி நான் தான்’ என்றார்.