பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டாம்: உயிருக்கு உத்திரவாதம் இல்லை?
பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் பாகிஸ்தான் வந்து யாரும் விளையாட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.
பாகிஸ்தானில் குவாட்டா நகரில் உள்ள பொலிஸ் அகாடமியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதன் விளைவாக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர், இதில் பொலிசார் மற்றும் இராணுவவீரர்களும் அடங்குவர்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தற்போது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைக்கு எந்த ஒரு வெளிநாட்டு அணியையும் அழைக்க வேண்டாம் என்றும் அதையும் மீறி அவர்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை நினைத்து பார்த்தால் மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், இவை எல்லாம் கடந்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.