முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் எஹ்சான் மணி தனது மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த பின்னர் வியாழக்கிழமை பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந் நிலையில் எஹ்சான் மணியும், ரமீஸ் ராஜாவும் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து கலந்துரையாடியதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கான உத்தியோபூர்வ அறிவிப்பு பிரதமரின் இல்லத்திலிருந்து விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இம்ரான் கான் முன்னாள் உலகக் கிண்ணத்தை வென்ற தலைவர் மற்றும் வாரியத்தின் தலைமைப் பொறுப்பாளர் ஆவார்.
1992 உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியின் உறுப்பினரான ரமீஸ் ராஜா, 57 டெஸ்ட் மற்றும் 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதில் இருந்து அவர் 53 அரைசதங்கள் மற்றும் 11 சதங்களுடன் மொத்தம் 8674 சர்வதேச ஓட்டங்களை குவித்துள்ளார்.