உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜத் கான் நியாசியை நேற்று பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் கடற்படைத் தளபதியின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பெப்ரவரி 21 அன்று திகதி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
தனது பயணத் திட்டத்தை ஆரம்பித்து, பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்திற்குச் சென்ற கடற்படைத் தளபதி, அங்கு அவரை பாகிஸ்தான் கடற்படைத் தளபதி கடற்படை மரபுகளின்படி அன்புடன் வரவேற்றார்.
அவர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் சின்னங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டதுடன், கலந்துரையாடல் சுமுகமான நிறைவு பெற்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]