பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய நிந்தனை சட்டம் விவகாரத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவி உதவிகள் மற்றும் ஏனைய சலுகைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குறித்த பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய நிந்தனை சட்டங்களை விமர்சித்து, நிலைமையை மீளாய்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மறுப்புறம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை பெறும் நாடுகள் வரிசையில் பாகிஸ்தான் முக்கிய பயனாளியாக உள்ளது.
நிலையான வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு ஜி.எஸ்.பி சலுகைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
இதனூடாக பெரும்பாலும் அனைத்து தயாரிப்பு வகைகளில் மூன்றில் இரண்டு பங்கு பூஜ்ஜிய நிலை வரிகளில் பாக்கிஸ்தான் பயனடைந்துள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய அரசியல் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி அந்தஸ்தைப் பேணுவதற்காக, மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 முக்கிய சர்வதேச மரபுகளை அங்கீகரிக்கவும் திறம்படவும் பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய நிந்தனை சட்டங்கள் உலகளாவிய கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடிக்கும் இந்த சட்டங்களே காரணமாக உள்ளது.
இதனடிப்படையில் இந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து முக்கிய அரசியல் குழுக்களின் ஆதரவுடன் கூட்டுத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதாவது , ஜிஎஸ்பி அந்தஸ்துக்கான பாகிஸ்தானின் தகுதியை உடனடியாக மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜி.எஸ்.பி இல்லாது போனால் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். 2010 முதல் 2020 வரை, பாகிஸ்தான் 27 வகையான பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய சலுகைகளின் கீழ் ஏற்றுமதி செய்கின்றது.
ஐரோப்பிய ஆணையத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பிய ஒன்றியம் இப்போது பாக்கிஸ்தானின் இரண்டாவது மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக உள்ளது.
இது 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் மொத்த வர்த்தகத்தில் 14.3 வீதமாகும். இது பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியான 28வீத்திலிருந்து கணிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் நிந்தனை சட்டங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான துன்புறுத்தல், வன்முறை மற்றும் கொலையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் அவதூறு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் நீதித்துறை நடைமுறைகளின் முடிவுகளைப் பொருட்படுத்தாமல் தங்கள் உயிருக்கு அஞ்ச வேண்டியுளள்தாக குறிப்பிடப்படுகின்றது.