பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
குவெட்டாவின் மஸ்துங் வீதியில் உள்ள எல்லைப்புறப் படை சோதனைச் சாவடி அருகிலேயே இந்த தற்கொலைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மூன்று பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்பதை குவெட்டா காவல்துறை துணை ஆய்வாளர் ஜெனரல் அசார் அக்ரம் உறுதிப்படுத்தினார்.
மோட்டார் சைக்களில் வந்த தற்கொலைத் தாரிகள் தனது வாகனத்தை, சோதனைச் சாவடிக்கு அருகாமையினால் நிறுத்தப்பட்டிருந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளின் வகானத்தில் மோதியதனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந் நிலையில் குவெட்டாவில் நடந்த தற்கொலை தாக்குதலை கண்டித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.