பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நெரத்திள் போது ஷியா மசூதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டதாக பொலிஸார் மற்றும் வைத்திசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்மென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் சுன்னி முஸ்லீம் இஸ்லாமிய போராளிகளால் குறித்த பாகிஸ்தானின் ஷியைட் சிறுபான்மையினர் மீது நீண்டகாலமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த மோசமான தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இரண்டு ஆயுதமேந்திய நபர்கள் மோட்டார் சைக்கிளில் மசூதிக்கு அருகில் வந்ததாகவும், வெளியில் கடமையில் இருந்த பொலிசாரால் சோதனைக்காக நிறுத்தப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியந்துள்ளது.
இதையடுத்து குறித்த இருவரும் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மசூதிக்குள் நுழைந்ததாகவும், குறித்த இருவரும் மசூதிக்குள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டார்களா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதன்முறையாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து, இஸ்லாமாபாத்தில் தங்கியிருக்கும் நிலையில், 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெஷாவர் பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]