பாகிஸ்தானில் உள்ள மெகா நகரங்கள் உட்பட பெரும்பான்மையான நகரங்களில் குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை என தேசிய சட்டமன்றத்தில் ஆளும் கட்சி தகவல் வெளியிடப்பட்டது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) முசரத் ரபீக் மஹேசரின் கேள்விக்கு பதிலளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஷிப்லி ஃபராஸ் கூறுகையில், 29 நகரங்களில் நிலத்தடி நீர் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதன் பிரகாரம் 20 நகரங்களில் பல்வேறு மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான நீர் பாதுகாப்பற்றதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
நிலத்தடி நீரில் ஆர்சனிக், இரும்பு, புளோரைட் மற்றும் பக்டீரியாக்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
29 நகரங்களின் நீர் தர கண்காணிப்பு (2020-21) பக்டீரியா மாசுபாடு (39 வீதம்), ஆர்சனிக் (8 வீதம்), நைட்ரேட் (4 வீதம்) மற்றும் புளோரைட் (4 வீதம்) முதலியவற்றை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதிக அளவு கனிம ஆர்சனிக் நீண்டகால வெளிப்பாட்டின் முதல் அறிகுறிகளாகும். இவை பொதுவாக தோலில் படிகின்றன.
மேலும் தோல் நிற மாற்றங்கள், தோல் புண்கள் மற்றும் உள்ளங்கைகள், உள்ளங் கால்களில் காயங்களை ஏற்படுத்துகின்றன.
இவை பிற்கால கட்டங்களில் தோல் புற்றுநோயை உருவாக்கும். ஆர்சனிக்கின் நீண்டகால வெளிப்பாடு சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரலின் புற்றுநோய்களையும் ஏற்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.
குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விளக்குமாறு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியலமைப்பில் 18 வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு தண்ணீர் ஒரு மாகாண விவகாரம் என்று அமைச்சர் கூறினார்.
பஞ்சாப் அரசு வருடத்திற்கு ஒரு முறை நீரை குறித்த ஆய்வை கட்டாயமாக்கி, நீரின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நீர் கொள்கை மற்றும் சட்டங்களை உருவாக்கியுள்ளது.
இவ்வாறான சட்ட நடைமுறைகள் மற்ற மாகாணங்களும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நாட்டில் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு மாசுபட்ட நீர் முக்கிய காரணமாகின்றது. ஒவ்வொருவரும் குடிப்பதற்கு போத்தலில் அடைக்கப்பட்ட நீரினை வாங்க முடியாது.
எனவே இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு மாகாண அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news