-வெளிநாட்டு வாழ் ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில், பஹ்ரைனில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டு உள்ளது. நடிகர் ரஜினி, அரசியலில் நுழைந்ததை தொடர்ந்து, அவரது பழைய மற்றும் புதிய ரசிகர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
மாற்றப்பட்டது : இந்நிலையில், பொது மக்களுக்காக துவக்கப்பட்ட, ‘ரஜினி ரசிகர்
மன்றம்’ என்ற, ‘மொபைல் ஆப்’ மற்றும் இணைய தளத்தின் பெயர், ‘ரஜினி மக்கள் மன்றம்’
என, மாற்றப்பட்டு உள்ளது. மலேஷியா, துபாய், பஹ்ரைன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில், ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், பஹ்ரைனில், ரஜினி ரசிகர் மன்றம் துவக்கப்பட்டு உள்ளது. இவற்றில், வெளிநாடு வாழ் தமிழர்கள், நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைவராக, நீலகிரியைச் சேர்ந்த சுரேஷ்; பொதுச் செயலராக, சென்னையைச் சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட பலர் பொறுப்பு ஏற்றனர்.
நற்பணி தலைவரான சுரேஷ் கூறுகையில், ”அனைத்து வெளிநாடு வாழ் ரஜினி ரசிகர்களையும், ஒரே குடைக்குள் ஒருங்கிணைக்கும் நோக்கில், பஹ்ரைனில் மன்றம் துவக்கப்பட்டு உள்ளது.
”வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு நற்பணி செய்யும் அமைப்பாக, மன்றம் செயல்படும்,” என்றார்.