பஸ் கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீட்டுகளை மேற்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பிலான முரண்பாடற்ற வகையிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பஸ் கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கும், தனியார் பஸ் சங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.
இதனபோதே மேற்கண்ட விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]