பஷில் ராஜபக்ஷ கைது – விளக்கமறியலில் வைக்க உத்தரவு
வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடி தொடர்பிலேயே, பஷில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில், பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22ம் திகதி கைதுசெய்யப்பட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் கடுவலை நீதவான் நீதமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதனையடுத்து, மாத்தறை பிரதேசத்தில் தனது மனைவியின் பெயரில் காணப்படும் காணி தொடர்பில், கடந்த மே மாதம் 12ம் திகதி கைதுசெய்யப்பட்டு, அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், கம்பஹா பிரசேத்திலுள்ள காணி தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 6ம் திகதி கைதுசெய்யப்பட்டு அன்றைய தினமே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் நான்காவது முறையாக பஷில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஷிலுக்கு விளக்கமறியல்
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பஷில் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை ஆகஸ்ட் மாதம் முதலாம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.