ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன், தனக்கு எதிராக பேசிய நான்கு அமைச்சர்களை நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இரட்டை இலையைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரம் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
தினகரன் சிறைியலிருந்த போது கட்சியில் சசிகலா, தினகரனை விலக்கி வைத்து விட்டதாக சில அமைச்சர்கள் பேசி வந்தனர். இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த தினகரன் கட்சி தனது கட்டுபாட்டில் தான் இருக்கிறது என கூறினார்.
அதேசமயம், தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து முதல்வர் மற்றும் கட்சியின் வழிகாட்டு குழு கூடி முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கூறினர்.
இந்நிலையில் சென்னை வந்த தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதில், சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்களை பதிவியிலிருந்து நீக்க வேண்டும்.
அவர்களுக்கு பதில் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன், தங்க தமிழ் செல்வன் ஆகியோருக்கு பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சரவையும் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கட்சியை எடப்பாடி கட்டுபாட்டிற்குள் கொண்டு வரக்கூடாது. தினகரன் கட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதாம். இதனால், அதிமுக அம்மா அணியில் கடும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.