83 வயதாகும் ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தில் உள்ள உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்தார்.
பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி என்கிற குட்டிமா பாட்டி மரணமடைந்துள்ளார். இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சீவலப்பேரி பாண்டி என்னும் திரைப்படத்தில் நடிகர் நெப்போலியனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.
வடிவேலு, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாள நடிகர் மோகன்லாலுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு மோகன்லால் ரொம்பவும் பழக்கமாம்.
குட்டிமா என்ற குறும்படத்திலும் இவர் நடித்துள்ளார். அதிலிருந்து குட்டிமா பாட்டி என்றும் அழைக்கப்படுகிறார் இந்த ரங்கம்மா பாட்டி. அதில் அவருடைய நடிப்புக்காக பல விருதுகள் பெற்றார். இவர் இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
83 வயதாகும் ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தில் உள்ள உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்தார்.
அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அன்னூர் தெலுங்குபாளையத்தில் இறுதிச்சடங்கு இன்றே நடைபெறுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | easy24newskiruba@gmail.com