அமெரிக்காவில் இஸ்லாமிய மாணவி ஒருவரை கையில் விலங்கு மாட்டி இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் உள்ள ரோஸ்மவுண்ட் வெலி உயர்நிலை பள்ளியில் பயின்றுவரும் இஸ்லாமிய சிறுமி ஒருவருக்கும், வகுப்பு தோழன் ஒருவனுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில், அச்சிறுவன் அந்த சிறுமியை பார்த்து தீவிரவாதி என்று கத்தியுள்ளான்.
இதில், வகுப்புக்கு வந்த பாதுகாப்பு அதிகாரி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் சிறுமியின் கையில் விலங்கு மாட்டி, அவர் தலையில் அணிந்திருந்த ஹிஜாபை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து சிறுமி கூச்சலிட்டுள்ளார், சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொலிசார் அவரிடம் விசாரணை நடத்திய பின் விடுவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவில் வாழும் இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.