பல நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் வானியல் அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்ட சூப்பர் பிளட் மூன் நிகழ்வை புதன்கிழமை கண்டு மகிழ்ந்துள்ளனர்.
பூமியின் நிழலுக்குள் உள்வாங்கிச் செல்வது போல சுமார் 15 நிமிடங்களுக்கு தென்பட்ட அக்காட்சியின்போது நிலவு, சிவப்பு நிறத்தில் தெரிந்தது. சூரியோதயமும் சூரிய அஸ்தமனமும் ஒரு சேர நடந்தபோது பூமிக்கு நடுவே நிலவு தோன்றியதால் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வுதான் சந்திர கிரகணம். அப்போது பூமியின் நிழலில் நிலவு இருக்கும்.
பொதுவாக ஆண்டுக்கு 2 – 5 முறை சந்திர கிரகணம் நிகழும். முழு சந்திர கிரகணம் என்பது மூன்று ஆண்டுகளுக்கு 2 முறையாவது நிகழும்.
ஒரு முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு பளிச்சென இரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும் என்பதால், அதை Blood Moon என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முழு சந்திர கிரகணம்தான் மே 26 புதன்கிழமை நிகழ்ந்தது.
நிலவு, புவியைச் சுற்றி நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஒவ்வொரு மாதமும் நிலவு, புவிக்கு அருகில் வந்து செல்கிறது. நிலவு புவிக்கு மிக அருகில் வரும் இந்த புள்ளியைத்தான் `Perigee’ என்கிறார்கள். இப்படி புவிக்கு அருகில் வரும் போது, முழு நிலவாக (பெளர்ணமி) இருந்தால் அதை `சூப்பர் மூன்’ என்கிறார்கள்.
சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி, புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து, நிலவை சென்றடைகிறது. எனவே நிலவு இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னுகிறது. அதோடு சூப்பர் மூன் வேறு என்பதால், இதை சூப்பர் ப்ளட் மூன் என்கிறார்கள்.
புவியின் வளிமண்டலத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு தூசுகளும் மேகங்களும் சூழ்கிறதோ, அந்த அளவுக்கு நிலவு இரத்தச் சிவப்பு நிறத்தில் மின்னும் என்கிறது நாசா.
சூப்பர் மூன் என்கிற நிகழ்வும், சந்திர கிரகணமும் இரு வேறு நிகழ்வுகள். பொதுவாக இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒருமித்து நிகழாது.
ஆனால் இந்த முறை இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நிகழவிருக்கின்றன.
எனவே இதை ஓர் அரிய நிகழ்வு என அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான `நாசா’ கூறுகிறது.
புதன்கிழமை நிகழ்ந்த சூப்பர் மூன் பசுபிக் முழுவதும் சிறந்த காட்சியை வழங்கியது. அத்துடன் வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி, தென் அமெரிக்காவின் அடிப்பகுதி மற்றும் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளிலும் சிறந்த காட்சிகளை வழங்கியது.
எனினும் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியில் இருந்தவர்கள், ஐரோப்பா, ஐப்பிரிக்கா, மேற்கு ஆசியாவில் இருப்பவர்கள் இந்த அரிய நிகழ்வை காணலாம் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்தபோதும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கலிபோர்னியாவின் சிகாகோவில்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில்
இந்தோனேசிய ரிசார்ட் தீவான பாலி நகரில்
ரஷ்யாவின் வொரோனேஜ் பிராந்தியத்தின் ரோசோஷ் நகரில்
பிரேஸிலின் சாண்டா கேடரினா மாநிலத்தின் புளோரியனோபோலிஸில்
வடமேற்கு இத்தாலியின் லாங்கே கிராமப்புறங்களில்
ஈராக்கின் தெற்கு தி கார் மாகாணத்தில் உள்ள நசிரியா நகரில்
சைப்ரியாட் தலைநகர் நிக்கோசியாவில்