இலங்கை – நேபாளத்துக்கு இடையேயான நேரடி விமான சேவைகள் பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ் ஆகஸ்ட் 31 முதல் கொழும்பு – கத்மாண்டுவுக்கு இடையேயான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் என்று நேபாளத்துக்கான இலங்கை தூதர் ஹிமாலீ அருணதிலக டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.
இரண்டு நகரங்களுக்கு இடையே வாரத்திற்கு இரு முறை விமானங்களை மீண்டும் தொடங்குவதாக விமான நிறுவனம் அறிவித்தது.
இரு நாடுகளுக்கிடையேயான நேரடி விமானம் சுற்றுலாவை மேம்படுத்தும் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான மக்களிடையே மக்கள் தொடர்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காத்மாண்டு-கொழும்புக்கு இடையே வழக்கமான நேரடி விமானங்களை சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அப்போதைய ரோயல் நேபால் ஏயர்லைன்ஸ் இயக்கி வந்தது. எனினும் விமானங்கள் வணிக ரீதியாக சாத்தியமில்லை என்பதால் நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.