தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில் பல அமைச்சர்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த வகையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று அதிகாலை 3.00 மணிக்கு கட்டார் நோக்கி பயணமாகியுள்ளார். Q.R. 669 ஆம் இலக்க விமானத்தில் இவர் பயணமாகியுள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர் ரவீன்திர சமரவீர ஆகியோரும் இன்று வெளிநாடு செல்ல தீர்மானித்துள்ளனர். அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் உம் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.